மத்திய அரசு ஊழியர்களிக்கு மகிழ்ச்சிஅளிக்கும் வகையில் மத்திய அரசு ஓர் முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது.அதன்படி,மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (டிஏ) 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது.மேலும்,ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி நிவாரணமும் (டிஆர்) 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.DA உயர்வு மற்றும் DR உயர்வு மூலம் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி,நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில்,7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த ஓய்வூதியதாரர்கள் இதனால் பயனடைவார்கள்?:
ரயில்வே குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்.
அகில இந்திய சேவை ஓய்வூதியம் பெறுவோர்.
மத்திய அரசு உட்பட சிவில் ஓய்வூதியம் பெறுவோர்,குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்.
பொதுத்துறை நிறுவனம்,தன்னாட்சி அமைப்புகளில் ஓய்வூதியம் (absorbee pensioners) பெறுபவர்கள்.
ஆயுதப்படை ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் சிவில் ஓய்வூதியம் பெறுவோர்.
பர்மா சிவிலியன் ஓய்வூதியம் & குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த அரசு ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்பங்களுக்கு இந்த நடைமுறை பொருந்தும் என்று கூறப்படுகிறது.