இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் !

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 20,528 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 16,935 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 20,528 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 16,935 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,43,449  லிருந்து 1,44,264 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,25,760 பேர் ஆக உள்ளது.

அதைப்போல,கடந்த ஒரே நாளில் 16,069பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை  4,30,97,510 ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை2,00,04,61,095கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 4,46,671 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது