இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் !

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 16,935 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 15,528 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 16,935 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 15,528 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,44,264  லிருந்து 1,43,654ஆக சற்று குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,25,785 பேர் ஆக உள்ளது.

அதைப்போல,கடந்த ஒரே நாளில் 16,113 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை  4,31,13,623ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை2,00,33,55,257கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 27,78,013 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது