ரூ.35,000 க்கு பெல்ட் வாங்கிய மகளை பார்த்து அதிர்ச்சியடையும் தாயின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சபி குப்தா என்பவர் குஸ்ஸி என்ற உயர்தர பெல்ட் ஒன்றை வாங்கி அதை தனது தாயான அனிதா குப்தாவிடம் காட்டியுள்ளார். இதன் விலையை கேட்டு தாயின் அதிர்ச்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சபி குப்தா இதன் விலை 35,000 ரூபாய் என்று கூறியுள்ளார். அதற்கு அவரது தாயார், 150 ரூபாய்க்கு இது கிடைக்கும் என்று அதிர்ந்து போய்விட்டார். தனது மகள் இப்படி விலையுயர்ந்த பொருளை வாங்கியதை கண்டு அவரது தாயார் மிக அதிர்ச்சியில் பேசியுள்ளார்.
மேலும், அதைக்கண்டு சபி குப்தா சிரிக்கிறார். ஏனென்றால், குஸ்ஸி என்பது உயர்நிலை வடிவமைப்பாளர் நிறுவனம். இதில் கிளாசிக் கடிகாரங்கள், கைப்பைகள், பெல்ட்டுகள், உடைகள் மற்றும் காலணிகளும் உள்ளன. இதை வாங்கவும் உபயோகப்படுத்தவும் பல பிரபலங்கள் விரும்புகிறார்கள். இந்நிலையில், இதை வாங்கியிருப்பதை கண்டு அனிதா குப்தா அதிர்ந்து போனார்.
unknown node