குஜராத்தின் மோர்பியில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் இதுவரை 132 பேர் பலியாகியுள்ளனர்.
குஜராத்தின் மோர்பியில் நேற்று மாலை நடந்த இந்த சம்பவத்தில் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 180 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹரிஷ் சங்கவி தெரிவித்துள்ளார்.
பாலம் விழுந்ததில் ஆற்றில் இன்னும் சில பேர் ஆற்றில் சிக்கியிருக்கலாம் என்றும் அவர்களைத்தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழு ஈடுபட்டு வருவதாகவும், இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
unknown nodeunknown node