நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான விசாரணையின் போது பாலிவுட் திரையுலகில் பலர் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியானது. இதில், சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பாலிவுட் பிரபலங்கள் பலருக்கு போதைபொருள்கள் விற்பனை செய்பவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் எனவும் போதைபொருள்களை பலர் பயன்படுத்தி வருகிறீர்கள் என்ற சர்சை எழுந்துள்ளது.
இதற்கிடையில், நடிகை தீபிகா படுகோன், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்பு அமைப்பு சம்மன் அனுப்பி உள்ளது. அதில், செப்டம்பர் 25 ஆம் தேதி படுகோனுக்கும், ஷ்ரத்தா கபூர் மற்றும் சாரா அலி கான் ஆகியோர் செப்டம்பர் 26 ஆம் தேதி ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
unknown node