வைரலாகும் டெல்லி பிச்சைக்காரரின் புகைப்படங்கள்

மாடலாக இருக்கும் டெல்லி பிச்சைக்காரனின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

மாடலாக இருக்கும் டெல்லி பிச்சைக்காரனின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

டெல்லி பிச்சைக்காரரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, அவர் பிச்சைக்காரனா அல்லது மாடலா என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்த பிச்சைக்காரனின் புகைப்படத்தை கவால்ஜித் சிங் பேடி ட்விட்டரில் “டெல்லி பிச்சைக்காரர்கள்” என்ற தலைப்பில் வெளியிட்டார்.

டெல்லியில் உள்ள போக்குவரத்து சிக்னலில் ஊன்றுகோலின் உதவியோடு நடந்து செல்லும் பிச்சைக்காரன் கருப்பு நிற டீ ஷர்ட் அணிந்து, கிளாஸியான சன்கிளாஸ் அணிந்து சென்றது வைரலாகி வருகிறது.

unknown node

இந்த புகைப்படம் மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் வைரலாகி, 20,000க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது.

unknown node

அவர் ஆதித்யா ராய் கபூர், ஹிருத்திக் ரோஷன் மற்றும் புஷ்பாவின் அல்லு அர்ஜுன் போன்றவர்களைப் போலவே இருப்பதாகவும் சிலர் பதிவிட்டுள்ளார்.

படத்தில் உள்ளவர் பிச்சைக்காரனைப் போல் இல்லை என்று பெரும் பகுதி மக்கள் கூறியதை அடுத்து, போக்குவரத்து சிக்னலில் பிச்சை கேட்கும் நபர் ஊன்றுகோலில் நடந்து செல்லும் வீடியோவை பேடி வெளியிட்டார்.

unknown node