டெல்லி நிதி ஆயோக் அலுவலகம் மூடல் .!

நிதி ஆயோக் அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நிதி ஆயோக் அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

டெல்லியில் உள்ள நிதி ஆயோக் அலுவலகத்தில் பணியாற்றி வந்த இயக்குநர் பதவியில் இருந்த ஒருவருக்கு  இன்று காலை 9 மணிக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த தகவல் அதிகாரிகளுக்கு தெரியவர, உடனடியாக அவர் பணியாற்றி வந்த நிதி ஆயோக் அலுவலக கட்டிடத்தை  இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.  மேலும் மூடப்பட்ட கட்டிடத்திற்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெறுகிறது.

கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.