சத்தியேந்திர ஜெயின், ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
ஹவாலா பணமோசடி வழக்கில் சிறையில் உள்ள டெல்லி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். அதனபடி, பணமோசடி வழக்கில் சத்யேந்தர் ஜெயின், அங்குஷ் ஜெயின் மற்றும் வைபவ் ஜெயின் ஆகியோரின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் சர்மா அமர்வு நிராகரித்தது.
சத்யேந்தர் ஜெயின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி தினேஷ் குமார் சர்மா அமர்வு, விண்ணப்பதாரர் செல்வாக்கு மிக்க நபர் என்றும் சாட்சியங்களை சிதைக்கும் திறன் கொண்டவர் எனவும் கூறியுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) நிபந்தனைகளை அழிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
டெல்லி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின், கடந்த 2022ம் ஆண்டு மே 30ம் தேதி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டு, தற்போது இந்த வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ளார். இந்த நிலையில், மீண்டும் சத்தியேந்திர ஜெயின் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.