டெல்லி மேயர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக பாஜக மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மோதல்.
டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவில் 134 இடங்களில் ஆம் ஆத்மீயும், 104 இடங்களில் பாஜகவும், 9 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றிருந்தது. இந்த சமயத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர். இதனை தொடர்ந்து, டெல்லி மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக, நியமன கவுன்சிலர்கள் பதவியேற்பது தொடர்பாக சிவிக் சென்டரில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், சிவிக் சென்டரில் டெல்லி மேயர் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
இதுதொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. டெல்லி மேயர் பதவிக்கு ஆம் ஆத்மி சார்பில் ஷெல்லி ஓபராயும், பாஜக சார்பில் ரேகா குப்தாவும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.