டெல்லி மாநகராட்சியில் 10 நியமன உறுப்பினர்களை துணை நிலை ஆளுநர் நியமித்ததற்கு ஆம் ஆத்மி எதிர்ப்பு.
டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலின் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பே மாமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி மேயர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக, நியமன கவுன்சிலர்கள் பதவியேற்பது தொடர்பாக சிவிக் சென்டரில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
பாஜக மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு முழக்கங்களை எழுப்பினர். நியமன உறுப்பினர்கள் பதவி ஏற்பதில் ஏற்பட்ட மோதலால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. நியமன உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஆம் ஆத்மி, பாஜக கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட குழப்பம் மற்றும் மோதல் காரணமாக, மேயர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கும் முன் டெல்லி மாநகராட்சி மாமன்ற கூட்டம்ஒத்திவைக்கப்பட்டது.டெல்லி மாநகராட்சியில் 10 நியமன உறுப்பினர்களை துணை நிலை ஆளுநர் நியமித்ததற்கு ஆம் ஆத்மி எதிர்ப்பு தெரிவித்தது. இந்த சூழலில் டெல்லி மாநகராட்சி மாமன்ற கூட்டம்ஒத்திவைக்கப்பட்டது.