ரஃபேல் போர் விமான தொடர்பான விவரங்களை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிர்மலா சீதாராமன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், இந்தியாவிடம் முதல் ரஃபேல் போர்விமானம் 2019-ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பான முழுமையான விவரங்களை பாதுகாப்புத் துறை அமைச்சகம் விரைவில் தாக்கல் செய்யும். சிஏஜி அறிக்கை 2019-2020 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்வதாக இருந்தது.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடர் திட்டமிட்டதுக்கு முன்பே முடிக்கப்பட்டதால், ரஃபேல் தொடர்பான விவரங்களை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் தெரிய வரும் என்று பதிவிட்டுள்ளார்.
unknown node