பாகிஸ்தானில் அபாயகரமான நிலையில் உள்ள ஒரு பாலத்தை மத்தியப்பிரதேசத்தில் உள்ள பாலம் என பதிவிட்டதற்கு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங் மன்னிப்பு கோரியுள்ளார்.
சேதமடைந்த நிலையில் உள்ள ஒரு பாலத்தின் படத்தை டிவிட்டரில் வெளியிட்ட அவர், அது போபாலில் உள்ள பாலம் என்றும் மக்களின் பாதுகாப்பில் பா.ஜ.க. அரசு மெத்தனமாக செயல்படுவதாகவும், பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் ஆல்ட் நியூஸ் (Altnews) என்ற இணையதளம் அது பாகிஸ்தானில் உள்ள பாலம் என்றும் தெரிவித்திருந்தது.
இதையடுத்து மன்னிப்பு கோரியுள்ள திக்விஜய் சிங் தனது நண்பர் அனுப்பிய புகைப்படத்தை ஆராயமல் பதிவிட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளார்.