சிபிஆர் செய்து காப்பாற்றிய கலெக்டர்..! வெளியான வைரல் வீடியோ..!

சண்டிகர் மாவட்ட ஆட்சியர், அலுவலகத்தில் மயங்கிய நபருக்கு சிபிஆர் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சண்டிகர் மாவட்ட ஆட்சியர், அலுவலகத்தில் மயங்கிய நபருக்கு சிபிஆர் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சண்டிகரில் வசித்து வரும் ஜனக் லால் என்பவர் கட்டிட விதி மீறல் வழக்கு தொடர்பாக வீட்டுவசதி வாரிய (CHB) அலுவலகத்திற்குச் சென்ற போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

அந்த நேரத்தில் சண்டிகர் மாவட்ட ஆட்சியரும், சுகாதார செயலாளருமான யஷ்பால் கர்க் விரைந்து வந்து அவருக்கு சிபிஆர் (CPR) முதலுதவி செய்து ஜனக்கின் உயிரை காப்பாற்றினார். ஜனக் தற்பொழுது அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மாவட்ட ஆட்சியரின் இந்த சிபிஆர் (CPR) செய்யும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. வீடியோ வைரலானதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் யஷ்பால் கர்க்கிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

unknown node