புல்வாமா தாக்குதல் தொடர்பாக வெளியாகும் போலி செய்திகள்!!பதிவேற்றம், லைக்,ஷேர் செய்ய வேண்டாம்!! சி.ஆர்.பி.எப் எச்சரிக்கை

தாக்குதல் தொடர்பாக போலியான தகவல்களை வெளியிடுபவர்களுக்கு சி.ஆர்.பி.எப் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தாக்குதல் தொடர்பாக போலியான தகவல்களை வெளியிடுபவர்களுக்கு சி.ஆர்.பி.எப் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குல்:

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  காஷ்மீரில் உள்ள ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் ஸ்ரீநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

unknown node

அப்போது  புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் அவர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதேபோல் இது தொடர்பாக பல செய்திகள் போலியாக  வெளியாகி வருகின்றன.குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அதிகமாக செய்திகள் வருகின்றது. அதில் சினிமா காட்சிகளை வெட்டி, ஒட்டவைத்து பஸ் மீது கார் மோதி வெடிப்பது போன்ற வீடியோக்களை சிலர் வெளியிட்டு இப்படித்தான்  சிஆர்பிஎப் வீரர்கள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டது என்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.மேலும் சிதைந்த வீரர்களின் உடல் பாகங்கள் என பல விதமாக செய்திகள் வெளியாகி வருகிறது.

சி.ஆர்.பி.எப் எச்சரிக்கை:

unknown node

இந்நிலையில் இந்த செய்திகள் தொடர்பாக சிஆர்பிஎப் தலைமையகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.அவர்கள் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில்,இதுபோன்ற தகவல்களை  சில சமூகவிரோதிகள் வெளியிடுகின்றனர்.இணையத்தில் வெளியாகும் புகைப்படங்கள், வீடியோக்களை தயவுசெய்து பதிவேற்றம், லைக் மற்றும் ஷேர் செய்ய வேண்டாம்.அப்படி வெளியானால் webpro@crpf.gov.in என்ற இணையத்தில் புகார் அளிக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.