இனி கவலை வேண்டாம்..! மருந்துகள் பறந்து வந்து சேரும்... ட்ரோன் டெலிவரி இதோ ஆரம்பம்...!

கொல்கத்தாவில் டிஎஸ்ஏடபிள்யூ (TSAW) ட்ரோன்கள் மூலம்  மருந்துகளின் டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் டிஎஸ்ஏடபிள்யூ (TSAW) ட்ரோன்கள் மூலம்  மருந்துகளின் டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது.

புதுடெல்லியை மையமாக கொண்ட ட்ரோன் ஸ்டார்ட்அப் நிறுவனம் டிஎஸ்ஏடபிள்யூ (TSAW) ட்ரோன்கள் கொல்கத்தாவில் மருந்துகளை வழங்குவதற்காக பிரத்யேக ட்ரோன் சேவையை தொடங்கியுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏதும் இல்லாமல், சரியான நேரத்தில் மருந்துகளை வழங்குவதற்கான இந்த நடவடிக்கை நவீன இந்தியாவின் முதல் படியாக உள்ளது.

unknown node

டிஎஸ்ஏடபிள்யூ (TSAW) டெக்னிட் ஸ்பேஸ் மற்றும் ஏரோ ஒர்க்ஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இணை துணைத் தலைவர் அர்பித் ஷர்மா, “மருந்துகளை வழங்குவதற்காக பிரத்யேக ட்ரோன் சேவையை அறிமுகப்படுத்தியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கொல்கத்தா மற்றும் ஹவுராவின் கடுமையான போக்குவரத்து நெரிசலை நாங்கள் கவனத்தில் கொண்டதால் வான்வழி மூலம் மருந்துகளை விநியோகிப்பது வசதியாக இருக்கும் என்று நினைத்தோம்” எனக் கூறினார்.

unknown node

இதையடுத்து மேற்கு வங்கத்தில் இன்னும் 8 இடங்களில் ட்ரோன் மூலம் மருந்துகளை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அருகிலுள்ள நகரங்கள் மற்றும் நகரங்களையும் உள்ளடக்கக்கூடிய மற்றொரு உயர்தர ட்ரோன்களை விரைவில் அறிமுகப்படுத்துவோம் என்று ஷர்மா மேலும் கூறினார்.