உக்ரைனில் நிலைமை மோசமாக உள்ளதால் இந்தியர்கள் உக்ரைனில் எங்கு இருந்தாலும் பாதுகாப்பாக இருங்கள் என இந்திய தூதரகம் எச்சரிக்கை.
உக்ரைனை மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்காக உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தலைநகர் டெல்லியில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறையை 1800118797 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், +91 1123012113, +91 1123014104, +91 1123017905 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி உக்ரைனின் கீவ்வில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. வீடு, ஓட்டல்கள் என எங்கு இருந்தாலும் அங்கேயே பாதுகாப்பாக இருக்க இந்தியர்களுக்கு வெளியுறவுதுறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யா தாக்கி வருவதால் கீவ் நகருக்கு சென்ற இந்தியர்கள் திரும்பி செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. situationroom@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், உக்ரைனில் இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ள +380 997300428, +380 997300483 என்ற எண்களை அழைக்கலாம். இதனிடையே, உக்ரைன் – ரஷ்யா இடையே போர் மூண்டுள்ள சூழலில், இப்பிரச்சனையில் இந்தியா நடுநிலை வகிக்கும் என வெளியுறவுத்துறை இனையமைச்சர் ஆர்.கே.சிங் பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…