இந்திய ரயில்வே துறைக்கு இதுவரை இல்லாத வகையில் பட்ஜெட்டில் ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
unknown nodeமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்ற அவையில், 2023-24 க்கான மத்திய பட்ஜெட் உரையை தொடங்கி தற்போது வாசித்து முடித்துள்ளார். அவர் தனது உரையைத்தொடங்கும் போது பட்ஜெட் 2023 இன் ஏழு முக்கிய அம்சங்களை சப்த்ரிஷி என்று குறிப்பிட்டார்.
மேலும் இந்த பட்ஜெட் பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கான வளர்ச்சிக்காக பல திட்டங்கள் உட்பட நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
இதில் இந்திய ரயில்வே துறைக்காக இதுவரை இல்லாத அளவிற்கு முதலீட்டுத்தொகை ரூ.2.40 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இது கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 9 மடங்கு அதிகம் மற்றும் 2013-14 இல் ரயில்வேக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விட 65.6 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown nodeரயில்வே துறைகளில் ரயில்களுக்கான பாதைகள், மின்மயமாக்கல் மற்றும் ரயில் நிலைய வசதிகளை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு இந்த பணம் பயன்படுத்தப்படும், ரயில்வே அமைச்சகம் 2023-க்குள் முழு மின்மயமாக்கல், வந்தே பாரத் ரயில்கள் மற்றும் 2,000 கிமீ பாதைகள் அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. நேற்று அறிவித்த பொருளாதார ஆய்வறிக்கையில், இந்திய ரயில்வேயின் சிறந்த முயற்சியாக வந்தே பாரத் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.