2021 டிசம்பருக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் – அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் 

Union Minister Prakash Javdekar has said that everyone in India will be vaccinated by December 2021.

இந்தியாவில் 2021 டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் செய்தியாளர் சந்திப்பின் போது பேசுகையில்,  இந்தியாவில் 2021 டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போடும் பணிகளில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ராகுல் காந்தி பற்றி பேசிய அவர், தடுப்பூசி போடுவதில் உங்களுக்கு அக்கறை இருந்தால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு கவனம் செலுத்துங்கள் என்றும், மத்திய அரசுக்கு எதிராக ராகுல்காந்தி அவதூறு பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.