பாஜக வேட்பாளர் காரில் வாக்குப்பதிவு இயந்திரம் பிடிப்பட்டது தொடர்பாக 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்.
மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது.அசாமில் உள்ள பதர்கண்டி தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் நேற்று வாக்குப்பதிவு இயந்திரம் பாஜக வேட்பாளர் காரில் கண்டுபிடிக்கப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்து செல்லும் தேர்தல் ஆணையத்தின் கார் பழுதானதால் வழியில் சென்ற வேறொரு காரில் லிப்ட் கேட்டு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்றிச் சென்றதாக தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. லிப்ட் தந்ததுஅதே தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கார் என்பது தேர்தல் அதிகாரிகளுக்கு தெரியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
பாஜக வேட்பாளர் காரில் வாக்கு இயந்திரம் கொண்டு செல்லப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, தற்போது 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரம் சேதமடையவில்லை என எனவும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…