உ.பி : பல இடங்களில் EVM மிஷின்கள் வேலை செய்யவில்லை… சமாஜ்வாடி வேட்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டு.!

By

மக்களவை தேர்தல்: உத்திர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் இதுவரை நடைபெற்ற 6 கட்ட தேர்தலில் 67 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையயில், இன்று இறுதி கட்ட தேர்தல் வாக்குபதிவில் மீதம் உள்ள 13 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெறும் வகுப்பதிவில் தான் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கோஷி மக்களவை தொகுதி சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் தற்போது வாக்குப்பதிவு குறித்து குற்றசாட்டை முன்வைத்துள்ளர்.

கோஷி தொகுதி சமாஜ்வாடி வேட்பாளர் ராஜீவ் ராய் செய்தியாளர்களிடம் கூறுகையில், பல வாக்குச் சாவடிகளில் EVM மிஷின்கள் சரியாக வேலை செய்யவில்லை, இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு,மக்கள் வாக்களிக்க இரண்டு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இந்த பிரச்சனைகள் குறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம் எனவும் கூறினார். சமாஜ்வாடி வேட்பாளர் ராஜீவ் ராய்.

Dinasuvadu Media @2023