மேற்கு வங்கம்: இன்று மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் பதற்றமான வாக்குப்பதிவு இடங்கள் அதிகம் இருப்பதால், அங்குள்ள 42 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று இறுதியாக 9 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வரும் வேளையில் தெற்கு 24 பர்கானாஸிஸ் பகுதியில் இரு பிரிவினர் இடையே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.
தெற்கு 24 பர்கானாஸில் உள்ள 40, 41 ஆகிய வாக்குசாவடிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் EVM மற்றும் VVPAT இயந்திரங்கள் குளத்தில் வீசப்பட்டன. இதுகுறித்து மேற்கு வங்க தேர்தல் ஆணையம் தனது சமூக வலைத்தளத்தில் தகவல்களை பதிவிட்டுள்ளது.
அதில், இன்று காலை 6.40 மணியளவில் பெனிமாதவ்பூர் எஃப்.பி பள்ளிக்கு அருகில் உள்ள 19-ஜெய்நகர் (எஸ்சி) பகுதியின் செக்டார் அலுவலரின் ரிசர்வ் EVM மிஷின் மற்றும் அங்குள்ள பேப்பர்களை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது. ஒரு EVM மிஷின், 2 VVPAT மிஷின்கள் குளத்திற்குள்ளே வீசப்பட்டுள்ளது என்றும்,
அந்த சமயம் செக்டார் போலீஸ் சற்று தூரத்தில் இருந்தார்கள் என்றும், துறை அதிகாரிகள் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்துறையின் கீழ் உள்ள 6 வாக்குசாவடிகளிலும் வாக்குப்பதிவு பணிகள் தடையின்றி நடந்து வருகிறது. புதிய EVM மற்றும் VVPAT இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…