கான்பூரில் மார்க்கெட் அருகே ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 500 கடைகள் எரிந்து நாசமானது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரின் ஹம்ராஸ் சந்தைக்கு அருகில் உள்ள பாஸ்மண்டி பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏஆர் டவரில் ஏற்பட்ட தீ சிறுது நேரத்தில் அருகில் உள்ள ஹம்ராஸ் சந்தைக்கு அருகில் உள்ள வளாகங்களுக்கு வேகமாக பரவியது. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
unknown nodeஇதையடுத்து சுமார் 15 முதல் 16 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை அணைக்கும் நடவடிக்கைகளுக்கு துணையாக அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
unknown nodeஇந்த விபத்து குறித்து மாநில தீயணைப்பு துறையின் துணை இயக்குனர் கூறுகையில், “தீயை அணைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் ஷார்ட் சர்க்யூட் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது” என்றும் அவர் கூறினார்.