வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக ஆட்களை அனுப்பியதாக கூறி பண மோசடி; பிரபல பஞ்சாபி பாடகருக்கு சிறை...!!

Famous Punjabi pop music singer Thaler Mehandi accused charges of illegally entering overseas and fraudulent money laundering. Baxis Singh of Patiala filed a complaint in 2003, alleging that Thaler Mehndi had been cheated by claiming he was sending him to Canada. In the case, the Patiala Court ruled yesterday to impose a fine of Rs 2,000 for Thaler Mehndi. However, Talar Mehandi was granted an immediate bail

பிரபல பஞ்சாபி பாப் இசை பாடகர் தலேர் மெஹந்தி, இவர் வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக ஆட்களை அனுப்பியதாகவும் இதற்காக சிலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இந்நிலையில் பஞ்சாபில் உள்ள பாட்டியாலாவைச் சேர்ந்த பக்சிஷ் சிங் கடந்த 2003-ல் அளித்த புகாரில் , தன்னை கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி தலேர் மெஹந்தி பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக புகார் அளித்தார்.

இந்த வழக்கில் தலேர் மெஹந்திக்கு 2 ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து பாட்டியாலா நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. எனினும்,பாடகர் தலேர் மெஹந்திக்கு உடனடி யாக ஜாமீன் வழங்கப்பட்டது.