#BREAKING: விவசாயிகள் உயிரிழப்பு 60 ஆக உயர்வு..!

The Bharatiya Kisan Sangam (BKS) has said that 60 people have been affected by the cold rains in Delhi. A farmer lands once every 16 hours

விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் ஒவ்வொரு 16 மணி நேரத்திற்கு ஒரு விவசாயி உயிரிழக்கின்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் டெல்லியில் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றுடன் 40 -வது நாளாக போராட்டம் நீடித்து வரும் நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகள் குளிர் மழையால் பாதிக்கப்பட்டு இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளதாக பாரதிய கிசான் சங்கம் தெரிவித்துள்ளது.

16 மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு விவசாயி இறப்பதாவும், விவசாயிகள் உயிரிழப்புக்கு அரசு பதில் சொல்லியாக வேண்டும் என பாரதிய கிசான் சங்கம் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாய்த் தெரிவித்துள்ளார்.