முன்னாள் அமைச்சர் வீட்டு வாசலில் சாணத்தை கொட்டிய விவசாயிகள்!

BJP leader and former minister Dixon Sood commented that the farmers had visited Delhi. Thus, they dumped sand in front of his house

மத்திய அரசின் 3 வேளாண்சட்டங்களை எதிர்த்து உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும்  ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து 38 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பல கட்டங்களாக மத்திய அரசுடன் விவசாயிகள் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தியது. கடந்த 30 -ஆம் தேதியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இப்பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் மீண்டும் மறு பேச்சுவார்த்தை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பாஜக தலைவரும், முன்னாள் அமைச்சருமான திக்சன் சூட் டெல்லிக்கு விவசாயிகள் சுற்றுலா சென்றுள்ளதாக கருத்து தெரிவித்தார். இதனால், பஞ்சாப் மாநிலம் ஜோஷியான்பூரில் உள்ள அவரது வீட்டின் முன் சாணியைக் கொட்டி குவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.