விவசாயிகள் போராட்டம்.. சம்பவ இடத்தில் பிரபல WWE வீரர் "தி கிரேட் காளி"

Former WWE Champion The Great Khali joined the farmers' protest at the Tikri border in Delhi and expressed his support.

டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில், WWE-ன் பிரபல வீரரான “தி கிரேட் காளி” தனது ஆதரவினை தெரிவித்தார்.

அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்த 7 நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக டெல்லி – நொய்டா எல்லைகள் மூடப்பட்டுள்ளது.

விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மல்யுத்த தொடரான WWE-ன் பிரபல வீரரான “தி கிரேட் காளி” டிக்ரி எல்லையில் நடைபெற்று வந்த போராட்டத்தில் கலந்துகொண்டார். இதுகுறித்து அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் “ஜெய் ஜவான், ஜெய் கிசான்” என பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ, தற்பொழுது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

unknown node