விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை ! பிரதமர் மோடி அவசர ஆலோசனை

Farmers' Protest : Union ministers Amit Shah, Rajnath Singh Meet PM Narendra Modi Ahead Of Talks With Union Leaders

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப்-ஹரியானா  விவசாயிகள் 10-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.இரண்டு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் எந்த ஒரு இறுதி முடிவும் எட்டப்படவில்லை.விவசாய சங்கங்கள் தீவிரமாக ஆலோசனை பெற்று வந்த நிலையில், 8 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த டெல்லியில் விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.ஆகவே நாடு தழுவிய போராட்டத்திற்கு முடிவு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி கொண்டு வருகிறது.

இதனால் இன்று (டிசம்பர் 5 ஆம் தேதி)  விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில்,பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ,உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் வேளாண்மைத்துறை  அமைச்சர் நரேந்திர சிங் , தோமருடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.