17-வது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம்! டெல்லியில் பிரதான சாலைகள் மூடல்!

Major roads including Delhi-Agra and Delhi-Noida have been closed for the 17th day as farmers' protests continue in Delhi.

டெல்லியில் 17-வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடருகின்ற நிலையில், இந்த போராட்டத்தால், டெல்லி – ஆக்ரா, டெல்லி – நொய்டா உள்ளிட்ட பிரதான சாலைகள் மூடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு முடிவில்லாமல் நடைபெற்று வருகிற நிலையில், பல கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது.

இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர்,  இடதுசாரி முன்னணி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், டெல்லியில் 17-வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடருகின்ற நிலையில், இந்த போராட்டத்தால், டெல்லி – ஆக்ரா, டெல்லி – நொய்டா உள்ளிட்ட பிரதான சாலைகள் மூடப்பட்டுள்ளது. மேலும், அம்பாலாவில் உள்ள சம்பு, பஸ்தாரா உள்ளிட்ட பல சுங்கச்சாவடிகள் மூடபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டாதால், டெல்லி – ஜெய்பூர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.