தொடர்ந்து போராடி வரும் விவசாயிகள் ! இன்று அரசு மீண்டும் பேச்சுவார்த்தை

As the struggle against agricultural laws continues, the central government has decided to resume talks with farmers.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்,விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலையை சட்ட ரீதியாக உறுதிபடுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று விவசாயிகளின் கோரிக்கைகளாக இருந்து வருகிறது.

இதையடுத்து அண்மையில்  விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.இந்நிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன்  அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இன்று மீண்டும் நடைபெறுகிறது.இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டவில்லை என்றால், பல்வேறு முற்றுகை போராட்டங்களை தீவிரப்படுத்த உள்ளதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால், குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், மாநில ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிடவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.