#BREAKING: நாடு முழுவதும் 3-வது கட்ட தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 25- ஆம் தேதி நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மே 31 -ஆம் தேதி வரை கடுமையான

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 25- ஆம் தேதி நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மே 31 -ஆம் தேதி வரை கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பின்னர், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஜூன் 1 முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வருகின்ற 31- ஆம் தேதி உடன் ஊரடங்கு முடிவடைய உள்ளதால், ஆகஸ்ட் 1 முதல் மேலும் சில தளர்வுகள் மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்த்த நிலையில் 3-வது கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

unknown node

அதன்படி, நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்ட்31 வரை கடுமையான கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம்.

நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 5 முதல் திறக்க அனுமதி.

பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை இயங்காது.

சுதந்திர தினக் கொண்டாட்டம் தனிமனித இடைவெளியுடன் நடைபெற வேண்டும் என அறிவித்துள்ளது.

மதுபானக் கூடங்கள், மெட்ரோ ரயிலுக்கு தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவைகளுக்கும் தடை நீட்டிப்பு

உள்நாட்டில் குறைந்த அளவில் மட்டுமே விமானங்களை இயக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விமான சேவைக்கு தடை நீட்டிப்பு

வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்துவரும் பணி தொடரும்.