வேளாண் சட்டங்கள்: இன்று மதியம் 2 மணிக்கு விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை!

The federal government is scheduled to hold talks with agricultural organizations at 2 p.m. today on the repeal of agricultural laws.

வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக இன்று மதியம் 2 மணிக்கு விவசாய அமைப்புகளுக்கு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், இன்று 35 ஆம் நாளாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கேயே அவர்கள் உணவு சமைத்து, அதனை உண்டும் வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய அரசு அவர்களுடன் 5 முறை பேச்சுவார்த்தைகள் நடத்தியது. ஆனால் அவை எதுவும் பலனலிக்கவில்லை. வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் வரை இந்த போராட்டம் தொடரும் என விவசாயிகள் அமைப்புகள் தெரிவித்துக்கொண்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக வரும் 29 ஆம் தேதி மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ள நிலையில், மத்திய அரசு வரும் 30 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. தொடர்ந்து 5 முறை பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தை விவசாயிகளிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.