உ.பி.,யில் வகுப்பறையில் மாணவனை சுட்டுக் கொன்ற சக மாணவர்..!

He took his uncle's gun to school and shot the student in the classroom this morning.Fellow student who shot student in classroom in UP

உத்தரபிரதேசத்தில் 10 ஆம் வகுப்பு மாணவரை சகமாணவரே சுட்டுக்கொன்றார்.

உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு  படிக்கும் இரு மாணவர்களுக்கு இடையே உட்காரும் இடத்திற்காக நேற்று சண்டைபோட்டுள்ளனர். இதனால் கோப்படைந்த ஒரு மாணவர் வீட்டில் இருந்து துப்பாக்கி எடுத்து வந்து சகமாணவரை சுட்டுக்கொன்றார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், இரண்டு சிறுவர்களும் 14 வயது என்றும், நேற்று வகுப்பில் உட்காரும் இடத்திற்காக சண்டையிட்டனர். அவர்களில் ஒருவர்  மிகவும் கோபமடைந்தார். இதனால், அவர் தனது மாமாவின் துப்பாக்கியை பள்ளிக்கு எடுத்துச் சென்று, இன்று காலை வகுப்பறையில் வைத்து மாணவனை  சுட்டுக் கொன்றார்.

குற்றம் சாட்டப்பட்டவர் வீட்டிற்குச் சென்று தனது மாமாவுக்கு சொந்தமான உரிமம் பெற்ற ரிவால்வரை எடுத்து வந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவரின் மாமா இராணுவத்தில் இருக்கிறார், தற்போது விடுப்பில் உள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி சந்தோஷ்குமார் சிங் கூறினார்.

இதில், சுடப்பட்ட மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, சுட்ட மாணவனை போலீசார் கைது செய்தனர். அவரது பையில் மற்றொரு நாட்டு துப்பாக்கியை காவல்துறையினர் கைப்பற்றினர். இதுகுறித்து அந்த மாணவனை காவல்துறை காவலில் வைத்து விசாரித்து வருகின்றோன் எனக் கூறினார்.