சரக்கு ரயில் மோதியதில் தண்டவாளத்தில் உறங்கிய 15 தொழிலாளர்கள் உயிரிழப்பு.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் உறங்கிய கொண்டுஇருந்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 தொழிலாளர்கள் பரிதாபமாக

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் உறங்கிய கொண்டுஇருந்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.  இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வந்த  பகுதியில் இருந்து  தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து சென்று வருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் மாவட்டத்தில் இருந்து மத்திய பிரதேசத்தை நோக்கி சில தொழிலாளர்கள் நடந்தே சென்றனர்.  நடந்துசென்று சோர்வு காரணமாக அந்த தொழிலாளர்கள் இரவு நேரத்தில் தண்டவாளத்தில் உறங்கிய போது அவர்கள் மீது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதியதில் 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் காயமடைந்த தொழிலாளர்கள் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவு ஒன்றை பத்திவிட்டுள்ளார். அதில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத்தில் நடந்த ரயில் விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது.ரயில்வே அமைச்சர் ஸ்ரீ பியூஷ் கோயலிடம்  விபத்து குறித்து பேசினேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

unknown node