மகாராஷ்டிராவில் மாவோயிஸ்டுகள் மற்றும் காவல்துறைக் இடையே துப்பாக்கிச் சண்டை – 13 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

At least 13 Maoists have been shot dead in a shootout between police and Maoists in Maharashtra.

மகாராஷ்டிர மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கட்சிரொலி எடப்பள்ளி வனப்பகுதியில் காவல்துறையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே மோதல் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் காவல்துறையின் சி-60பிரிவு காவல்துறையினர் இந்த மோதலில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்த எடப்பள்ளி பகுதியில் அவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்காக காவலர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அப்பொழுது அதிகாலை 5.30 மணியளவில் காவல்துறையினருக்கு மாவோயிஸ்டுக்கும் நடந்த துப்பாக்கி சண்டை நடைபெற்றுள்ளது. சுமார் ஒரு மணிநேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில் 13 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் 6 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கிருந்து  மாவோயிஸ்டுகளுக்கு தேடப்பட்டு வருவதாக கட்சிரொலி போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.