கேரளாவில் கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவரும் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததில் இருவரும் இறந்தனர்.
கேரளாவில் உள்ள கண்ணூரில் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அருகே சென்று கொண்டிருந்த கார் திடிரென தீப்பிடித்து எறிந்துள்ளது. இதில் காரில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணும், அவரது கணவரும் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கண்ணூர் அருகே குட்டியாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரஜித் மற்றும் அவரது மனைவி ரீஷா என்பவர்கள்.
unknown nodeநிறை மாத கர்ப்பணியாக இருந்த ரிஷாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கண்ணூர் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். இதனையடுத்து ரீஷா அவரது கணவர் மற்றும் அவரது உறவினர் பெண்கள் 3 பேர், ஒரு குழந்தை என அனைவரும் காரில் சென்றுள்ளனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் திடீரென காரின் முன் பகுதி தீப்பிடிக்க தொடங்கியுள்ளது.
unknown nodeவாகனம் தீப்பிடித்ததில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த குழந்தை உட்பட நான்கு பேர் காரை விட்டு இறங்கினர். ஆனால் தீ பற்றி எரிந்ததில் காரின் முன் பகுதியில் அமர்ந்திருந்த பிர்ஜித் மற்றும் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ரீஷாவால் காரின் கதவை திறந்து தப்பிக்க இயலவில்லை. அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
unknown nodeகார் தீப்பிடித்து எரிவதை கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் காரின் முன்புறம் உள்ள பெட்ரோல் டேங்க் வெடித்து விடுமோ என்ற பயத்தில் இருந்ததால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை முழுவதுமாக அணைத்து பிரிஜித் மற்றும் ரீஷாவின் உடல்களை மீட்டனர்.
unknown nodeதம்பதிகளோடு காரில் பயணம் செய்த நான்கு பேருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை. தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு செய்த பின்னர் தான் தீ விபத்துக்கான காரணத்தை அறிய முடியும் என்றும் இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
unknown node