ஒடிசாவின் கோர்தா மாவட்டத்தில் சட்டவிரோத பட்டாசு வெடித்ததில், 4பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் கோர்தா மாவட்டத்தில் ஹோலி பண்டிகைக்காக ஒரு வீட்டில் பட்டாசுகள் தயாரித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர், மேலும் 4 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இது குறித்து கோர்த்த மாவட்ட எஸ்.பி கூறும்போது பட்டாசுகள் தயாரித்து காயா வைப்பதற்காக வீட்டில் பல்வேறு இடங்களில் வைத்துள்ளதால், தீ வேகமாக பரவி மற்ற இடங்களும் தீப்பிடித்தது. அருகிலுள்ள மற்ற 3 வீடுகளும் முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமானது என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அந்த இடத்தில் பட்டாசு தயாரிக்க அவர்களுக்கு உரிமம் எதுவும் வழங்கப்படவில்லை. சம்பவம் குறித்து தகவலறிந்து தீயணைப்பு துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர், விபத்தில் காயமடைந்த இருவர் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று எஸ்பி மேலும் கூறினார்.