#BREAKING : கேரளாவில் திங்கள் முதல் இரவுநேர ஊரடங்கு..!

The state government has announced that a night curfew will be imposed in Kerala from next Monday due to corona.

கேரளாவில் கொரோனா காரணமாக வரும் திங்கள் முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

கேரளாவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு காரணமாக  வரும் திங்கள் முதல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்து வரும் நிலையில் இரவு ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் இன்று மேலும் 31,265 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் மேலும் 153 பேர் உயிரிழந்த நிலையில் 2.4 லட்சம் பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.