இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலம் ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜூலை 14 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்த பணி சந்திரயான்-2 ஐப் பின்தொடர்கிறது, இதன் மூலம் நிலவின் சுற்றுப்பாதையை அடைவது, லேண்டரைப் பயன்படுத்தி சந்திர மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்குவது மற்றும் நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்ய லேண்டரில் இருந்து வெளியே வரும் ரோவர் உள்ளிட்ட பல்வேறு திறன்களை நிரூபிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புறப்பட்ட பதினாறு நிமிடங்களுக்குப் பிறகு, உந்துவிசை தொகுதி ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டு, பூமியில் இருந்து குறைந்தபட்சமாக 170 கிலோ மீட்டர் தூரத்திலும்,மற்றும் அதிகபட்சமாக 36,500 கிமீ தொலைவில் சந்திர சுற்றுப்பாதையை நோக்கிச் செல்லும் நீள்வட்ட சுழற்சியில் பூமியைச் சுமார் 5-6 முறை சுற்றிவரும்.
தற்பொழுது சந்திரயான்-3 பற்றிய புதிய தகவலை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.அதில் “விண்கலம் சீராக உள்ளது” என்றும் , “முதல் சுற்றுப்பாதையை உயர்த்தும் முறை பெங்களூரு ISTRAC/ISRO இல் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. விண்கலம் இப்போது 41,762 கிமீ x 173 கிமீ சுற்றுப்பாதையில் உள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.”
சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 23ம் தேதி நிலவில் தரையிறங்க இருக்கிறது.
unknown node