மேற்குவங்க முன்னாள் முதல்வர் உடல்நிலை மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உட்லேன்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேற்குவங்க மாநில முன்னாள் முதல்வர் புத்ததேப் பட்டாசார்ஜீ-க்கு செயற்கை சுவாசம் முறையில் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாச உதவி அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeWoodlands state [Image-Twitter/@ani]
புத்ததேப் உடல்நிலை குறித்த அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அவர் உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் உடல்நிலை தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்ததேப் பட்டாசார்ஜீ கடந்த 2000 முதல் 2011 ஆம் ஆண்டு வரை மேற்குவங்க முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
