குஜராத் முன்னாள் ஆளுநர் ஓம் பிரகாஷ் கோலி காலமானார்
குஜராத் மாநில முன்னாள் ஆளுநர் கவர்னர் ஓம் பிரகாஷ் கோலி தனது 87 வயதில் காலமானார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று புது டெல்லியில் நடைபெற உள்ளது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, டெல்லியில் எங்கள் கட்சியை வலுப்படுத்துவதில் அவர் முக்கியப் பங்காற்றினார். பொதுமக்கள் நலனிலும் அவர் கவனம் செலுத்தினார் என்று ட்வீட் செய்துள்ளார்.
unknown nodeபிரகாஷ் கோலி 2014 முதல் 2019 வரை குஜராத் ஆளுநராக இருந்தவர். செப்டம்பர் 8, 2016 முதல் ஜனவரி 19, 2018 வரை மத்தியப் பிரதேச ஆளுநராக கூடுதல் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.
இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, “குஜராத் முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான ஓம் பிரகாஷ் கோலியின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. அவருடைய அர்ப்பணிப்பும் சேவையும் எப்போதும் நம்மை ஊக்குவிக்கும்” என்று ட்வீட் செய்துள்ளார்.