கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதி.!

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, நிமோனியா காய்ச்சல் காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, நிமோனியா காய்ச்சல் காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரள முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த உறுப்பினருமான உம்மன் சாண்டி, நிமோனியா காய்ச்சல் காரணமாக, நேற்று திருவனந்தபுரம்  நெய்யாட்டின்கரா பகுதியில் உள்ள நூருல் இஸ்லாம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையில் (NIMS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அவரது மகன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் லேசான நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், முதல்வர் பினராயி விஜயன் நேரில் அழைத்து தனது தந்தையின் உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும், அதற்கு நன்றி தெரிவித்து அவர் பதிவிட்டிருந்தார்.

மேலும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வரை சந்தித்து நலம் விசாரித்ததாகவும் ANI நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

unknown node