உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் மருத்துவமனையில் அனுமதி..!

உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத்தின் உடல்நிலை மோசமடைந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத்தின் உடல்நிலை மோசமடைந்ததால்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டேராடூனில் இளைஞர்கள் மீது போலீசார் நடத்திய தடியடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் இன்று நடத்திய போராட்டத்தில் உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத்தின் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் நகரில் உத்தரகாண்ட் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்திய பல்வேறு ஆள்சேர்ப்பு தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை கோரி வேலையற்ற இளைஞர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

unknown node

போராட்டத்தைக் கைவிடுமாறு போலீசார் வற்புறுத்தியதால் இளைஞர்கள் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதில் சில இளைஞர்கள் காயமடைந்தனர்.

unknown node

[Image Source : Twitter/@htTweets]

இளைஞர்களுக்கு எதிரான அட்டூழியத்தை கண்டித்து உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தில் ராவத்தின் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

unknown node