வேதாந்தா ஒப்பந்தத்தில் இருந்து ஃபாக்ஸ்கான் விலகல்!

மின்னனு சாதன உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் விலகி இருப்பது வேதாந்தாவுக்கு பின்னடைவு.

Foxconn

மின்னனு சாதன உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் விலகி இருப்பது வேதாந்தாவுக்கு பின்னடைவு.

செமிகண்டக்டர் உற்பத்திக்காக வேதாந்தாவுடன் செய்த கூட்டு தொழில் ஒப்பந்தத்தில் இருந்து ஃபாக்ஸ்கான் நிறுவனம் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. வேதாந்தாவுடன் இணைந்து ரூ.1.61 லட்சம் கோடி முதலீட்டில் கூட்டு தொழில் தொடங்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருந்தது.

செமிகண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலையை குஜராத்தில் அமைப்பது என்று இரு நிறுவனங்களும் ஒப்பந்தங்கள் செய்திருந்தன. கடந்தாண்டு தொடங்கப்பட்ட கூட்டு தொழில் நிறுவனத்தில் இருந்து தனது பெயரை நீக்க ஃபாக்ஸ்கான் நடவடிக்கை எடுத்துள்ளது. மின்னனு சாதன உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் விலகி இருப்பது வேதாந்தாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஃபாக்ஸ்கான் விலகுவதை அடுத்து ஐரோப்பின் எஸ்.டி., மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை கூட்டு சேர்க்க வேதாந்தா நிறுவனம் முயன்றதாகவும், எஸ்.டி., மைக்ரோ எலக்ட்ரானிக்ஸை கூட்டு சேர்க்க முயன்ற வேதாந்தாவின் முயற்சிக்கும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.