கொரோனா அதிகரிப்பால் கேரளாவில் இன்று முழு ஊரடங்கு அமல்...!

A full curfew has been imposed in Kerala today due to the spread of corona.

கொரோனா அதிகளவில் பரவியுள்ள காரணத்தால் கேரளாவில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது குறைந்து இருந்தாலும், கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. கடந்த மூன்று தினங்களாக கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து வருகிறது. கொரோனா முதல் அலையை சிறப்பாகக் கையாண்ட கேரள மாநிலம், இரண்டாம் அலையில் அதிக அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சுதந்திர தினம் மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்திருந்த நிலையில் தற்போது கொரோனா பரவால் அதிகரித்துள்ளதால், இன்று முழு ஊரடங்கு அமல்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று கேரளாவில் அவசியமின்றி இயங்கக்கூடிய வாகனங்கள் மற்றும் வெளியே சுற்றித் திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.