பரவும் கொரோனா.. நாக்பூரில் மார்ச் 31 வரை முழு ஊரடங்கு உத்தரவு!

A full curfew has been imposed in Nagpur, Maharashtra, till March 31, as corona spread is currently on the rise in India.

இந்தியாவில் தற்பொழுது கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் மார்ச் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலே கொரோனா பாதிப்பு தற்பொழுது அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் நாள் ஒன்றுக்கு 25,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது மாநிலம் முழுவதும் மார்ச் 31 ஆம் தேதி வரை சில கட்டுப்பாடுகளை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில், வரும் 15 ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஒருவார கால முழு ஊரடங்கு அறிவித்து, நாக்பூர் மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அங்கு கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அம்மாவட்டத்தில் வரும் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் மளிகை கடைகள், உணவகங்கள் மற்றும் காய்கறி கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.