வரும் ஜூன் மாதத்தில் 12 முதல் 14 கிமீ உயரத்தில் ராக்கெட்டுகளை அனுப்பி சோதிக்கும் பணிகள் நடைபெறும் என இஸ்ரோ தலைவர் பேட்டி.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் நாட்டின் இரண்டு செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய இஸ்ரோ தலைவர், வரும் ஜூன் மாதத்தில் 12 முதல் 14 கிமீ உயரத்தில் ராக்கெட்டுகளை அனுப்பி சோதிக்கும் பணிகள் நடைபெறும்.
மேலும், ராக்கெட்டுகளை ஹெலிகாப்டர்கள் மூலம் விழ செய்து சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் 2024ம் ஆண்டு பிப்ரவரியில் ககன்யான் திட்டம் தொடர்பாக முழு சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். ஏற்கனவே, ஆதித்யா ராக்கெட் ஏவப்பட்ட நிலையில், திரவ எரிபொருள் மூலம் இயங்கும் ராக்கெட் அடுத்த கட்டமாக இருக்கும். மணித்தார்களை விண்ணுக்கு அனுப்பி, மீண்டும் பூமிக்கு வர செய்வதற்கான ஏவுகலன் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது எனவும் குறிப்பிட்டார்.