பிரதமர் மோடியுடன் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் சந்திப்பு.!

பிரதமர் மோடியுடன் ஜெனரல் பிபின் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியுடன் ஜெனரல் பிபின் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பல மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இந்த தட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன.

இதைத்தொடர்ந்து, ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு ஆக்சிஜனை  கொண்டு செல்ல விமானப் படையும் உதவி செய்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை சமாளிக்க முப்படைகளால் மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகள் குறித்து பிரதமர் மோடியுடன் ஜெனரல் பிபின் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக  பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவிலும், வெளிநாட்டிலும் ஆக்ஸிஜன் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்வதற்காக விமானப்படை  மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும் பிரதமர் கேட்டறிந்தார்.