ஆன்லைன் வகுப்பிற்காக தந்தையின் போனை வாங்கிய மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

A teenage girl was shocked to find about her father's extramarital affair when he lent his phone to her for online classes in Karnataka.

கர்நாடகாவில் ஆன்லைன் வகுப்புகளுக்காக தனது தந்தையின் தொலைபேசியை வாங்கியபோது, அதில் இருந்த விடியோவை பார்த்து தனது தாயிடம் கூறினார்.

கர்நாடகா மாநிலம், மண்டியா மாவட்டம், நாகமங்களா என்ற இடத்தில் வசித்து வந்த 17 வயது சிறுமி, தனது தந்தையின் மொபைல் போனை ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கினார். அப்பொழுது அந்த போனின் கேலரியில் இருக்கும் புகைப்படம், விடியோக்களை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதில், அவரின் தந்தை வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வீடியோ இருந்துள்ளது.

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, தனது தாயாரிடம் கூறினார். அதன்பின் அந்த பெண்ணின் வீட்டில் சண்டை நடக்க, அந்த பெண்ணின் தாயார் அப்பகுதி போலீசாரிடம் தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரளித்தார். தனது மனைவி பிரிந்த செல்ல முற்பட்ட போது அந்த கணவர், தனது மனைவியுடன் வாழ விருப்பம் தெரிவித்தார். இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்து, 2 மகள்கள் உள்ளது. அதில் ஒருவருக்கு 17 வயதும், மற்றொருவருக்கு 15 வயது என்பது குறிப்பிடத்தக்கது..