2000 ரூபாய் கொடுக்க மறுத்த காதலி – சானிடைசரை ஊற்றி எரித்த காதலன்!

2000 ருபாய் பணம் கொடுக்க மறுத்த காதலியை சானிடைசரை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிய காதலன், பொதுமக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்.

2000 ருபாய் பணம் கொடுக்க மறுத்த காதலியை சானிடைசரை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிய காதலன், பொதுமக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்.

இந்தியாவின் நகரங்களில் ஒன்றான சண்டிகரில் உள்ள ஷில்லாங் எனும் இடத்தை சேர்ந்த நரேஷ் என்பவரும் இளம் பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அண்மையில் அந்த பெண்ணிடம் நரேஷ் 2000 ரூபாய் கேட்டுள்ளார். இல்லை என தர மறுத்த பெண்ணின் மேல் சானிடைசரை ஊற்றி கையில் வைத்திருந்த லைட்டரை பயன்படுத்தி தீ வைத்து எரிக்க முயன்றுள்ளார்.

அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து 20 சதவிகித தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நரேஷ் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் தகவல்கள் மற்றும் பெயர் தெரிந்ததால் காவல் துறையினர் அவரை தேடி வருகின்றனர்.